தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா: சிகிச்சையில் 228 பேர்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் 228 பேர் உள்ளனர். 

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 3:33 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் 228 பேர் உள்ளனர். 

தமிழகத்தில் நேற்று 21 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. எனினும் கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.  அதில், இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,53,054-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும்  29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,800-ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 20,297 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.