தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: ஆணையத்தின் பதில்?

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2022, 2:17 pm

DIN


ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கரோனாவுக்குப் பிறகு தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பலர் அரசுப் பள்ளிகளிலும், ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளிலும் சேர்ந்துள்ளனர். 

இந்நிலையில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது. அப்பள்ளிகளில் 70 முதல் 110 மாணவர்கள் வரை பயில்கின்றனர்.   
 
தமிழக அளவில் 1,100 ஆதி திராவிட நலப் பள்ளிகள் உள்ளது, அதில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.

இதனால் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 5ஆம் தேதி இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதிதிராவிடர் நல ஆணையகம் பதிலளித்துள்ளது.

“ ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் “ நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதத்துக்கு ஆதிதிராவிடர் நல ஆணையகம் பதில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.