மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செங்கல்பட்டில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் அஷ்ட பந்தன  மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகாத்தம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 7:47 am

DIN


செங்கல்பட்டு: செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகாத்தம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகாத்தம்மன் தெருவில் அமைந்துள்ள பழமையான நாகாத்தம்மன் கோயில் உள்ளது இக்கோயில் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய விழாக் குழுவினர்கள் தீர்மானத்து கோயில் திருப்பணி நடைபெற்று வந்தன .

இந்த பணி முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு நகரம் பெரிய நத்தம் கிராமத்திலுள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயிலில் சாஸ்திர முறைப்படி பாலவிநாயகர் பாலமுருகன் இந்திராணி மகேஸ்வரி சப்த கன்னியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 150 மணி நேரம் சாதனை பெற்றார் செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா ராகவனின் மீனாட்சி ராகவன் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையடுத்து திங்கட்கிழமை கோ பூஜை மங்கல இசை விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி, பிரவேச பலி ,அங்குரார்ப்பணம் கும்ப அலங்காரம் முதல் கால பூஜைகள் ஹோமங்கள் பூர்ணாஹுதி மகா தீபாராதனை  பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. செவ்வாய்க்கிழமை விசேஷ சந்தி ,சூரிய பூஜை, துவார பூஜை, புதிய பிம்பங்களும் உள்ளிட்ட பூஜைகளுடன் இரண்டாம் கால பூஜை ஹோமங்கள் பூர்ணாஹுதி மகாதீபாராதனை விக்னேஸ்வர பூஜை மூன்றாம் காலம் பூஜை புதிய பிம்பங்கள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது. 

Story image

புதிய விமான கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகளுடன நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதன்கிழமை மங்கல இசை நான்காம் கால பூஜை ஹோமங்கள் நாடி சந்தானம் தத்வார்ச்சனை ஸபர்சாஹுதி மகா பூர்ணாஹுதி மகா தீபாராதனையுடன் கலச புறப்பாடு புதிய விமான கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகளுடன நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 ஸ்ரீ பக்தி ஞான பீடத்தின் நிறுவனர் குகானந்தபூரி ஸ்வாமி கலந்து கொண்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. 

சிவஸ்ரீ எஸ் குமார் குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் செய்யப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினர் நத்தம் கிராமத்தார்கள் மகளிர் ஆன்மீக குழுக்கள் மற்றும் பெரிய நோக்கம் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.