தங்கம் சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.40,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தைக் கடந்தது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.40,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, கடந்த வாரம் சற்று குறையத் தொடங்கிய நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து, ரூ.40,040-க்கு-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 அதிகரித்து, ரூ.5,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து கடந்த மார்ச் 7 ஆம் தேதி பின்னர் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.40 ஆயிரத்தைக் கடந்த்துள்ளது. 10 கிராம் எடைக்கொண்ட 24 காரட் தங்கத்தின் விலை ரூ.100 ஆதிகரித்து, ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து, ரூ.74.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.74,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் மிக அதிகமாக தங்கத்தைப் பயன்படுத்தும் நாடு இந்தியாவாகும். பெரும்பாலும் ஆபரணச் சந்தை தேவைக்காகவே இங்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியா 842.28 டன் தங்கம் இறக்குமதி செய்தது.

தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்தான் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். 

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,996
1 பவுன் தங்கம்............................... 39,968
1 கிராம் வெள்ளி............................. 74.20
1 கிலோ வெள்ளி.............................74,200

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,947
1 பவுன் தங்கம்............................... 39,576
1 கிராம் வெள்ளி............................. 72.70
1 கிலோ வெள்ளி.............................72,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com