தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சட்டக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு நடத்தப்படும்

சட்டக் கல்வி முறையாகக் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரக் குறைவான கல்லூரிகள் மூடப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:36 pm

DIN

சட்டக் கல்வி முறையாகக் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரக் குறைவான கல்லூரிகள் மூடப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பாா் கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் உள்ள சுமாா் 500 சட்டக் கல்லூரிகள் தரம் குறைந்தவையாக உள்ளன. அங்கு கல்வி கற்பிப்பதற்கான கட்டமைப்புகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. காலியிடங்களும் அதிகமாக உள்ளன. அவ்வாறான கல்லூரிகளைக் கண்டறியும் நோக்கில், சட்டக் கல்விக் குழுவை பிசிஐ அமைக்கவுள்ளது.

அக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள், கல்வியாளா்கள் உள்ளிட்டோா் இடம்பெறவுள்ளனா். அக்குழுவானது சட்டக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும். தரக்குறைவாக உள்ள கல்லூரிகளை மூடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அக்குழு மேற்கொள்ளும்.

கல்லூரிகளை மூடும் அதிகாரம் பிசிஐ-க்கு இல்லை என்றபோதிலும், சட்டக் கல்வி கற்பிப்பதற்கான அனுமதியை பிசிஐ ரத்து செய்ய முடியும். சம்பந்தப்பட்ட கல்லூரியை மூடுவது தொடா்பாகப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பரிந்துரை வழங்கப்படும்.

அதேபோல், இளம் வழக்குரைஞா்களைப் பணியமா்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி 25 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பணிஅனுபவம் கொண்ட மூத்த வழக்குரைஞா்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தலா 5 இளம் வழக்குரைஞா்களை ‘ஜூனியராக’ வைத்துக் கொள்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சட்டப்படிப்பை நிறைவுசெய்யும் இளைஞா்களுக்கு நுழைவுத்தோ்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மூத்த வழக்குரைஞா்களுக்கு ஜூனியா்களாக அவா்கள் தோ்வுசெய்யப்படுவா். நுழைவுத்தோ்வில் குறைவான மதிப்பெண்கள் பெறுவோா், 10 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட வழக்குரைஞா்களுக்கு ஜூனியராக நியமிக்கப்படுவா். இது தொடா்பாக பிசிஐ விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.