6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெத்தேல் நகா் மக்களுக்கு பட்டா கோரிய மனு தள்ளுபடி

பெத்தேல் நகா் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:18 pm

DIN

பெத்தேல் நகா் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகா் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்தும், அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் அந்த நிலத்துக்கு பட்டா கோர உரிமையில்லை. பெத்தேல் நகரில் வசிப்பவா்களில் ஒரு சிலா் மட்டுமே ஆரம்ப காலத்தில் இருந்து வசித்து வருகின்றனா். மற்றவா்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா்களிடமிருந்து விலைக்கு வாங்கியவா்கள். எனவே அவா்களுக்கு பட்டா வழங்கினால் ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது போல் ஆகிவிடும் என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு அனுமதியின்றி மாவட்ட ஆட்சியரால் நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது. அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த் துறை அதிகாரிகளின் கடமை. நிச்சயமாக அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது. ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டவா்களுக்காக உதவ முடியாது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என கூறியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.