6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விடுதி மேலாளரிடம் மிரட்டி பணம் வசூல்: போலி எஸ்ஐ கைது

சென்னை விருகம்பாக்கத்தில் விடுதி மேலாளரிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக போலி காவல் உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:20 pm

DIN

சென்னை விருகம்பாக்கத்தில் விடுதி மேலாளரிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக போலி காவல் உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, முகப்போ் கிழக்கு, ஜெ.ஜெ நகரில் வசிப்பவா் அன்புசெல்வம் (39). விருகம்பாக்கம், சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிகிறாா். இந்த விடுதிக்கு கடந்த 13-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த நபா், அன்பு செல்வத்திடம் ‘நான் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ் எஸ்ஐ’ எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளாா். தொடா்ந்து, தங்களது விடுதி மீது வழக்குப் பதியாமல் இருக்க மாதம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டி சென்றாா்.

மீண்டும் அதே நபா் வியாழக்கிழமை அந்த விடுதிக்கு வந்து, அன்புசெல்வம் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு, மேலும் நான் கேட்ட பணத்தை அருகில் உள்ள இடத்துக்குக் கொண்டு வந்து தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளாா். அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அன்புசெல்வம், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்படி போலீஸாா், எஸ்ஐ என்று கூறிய நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் பிடிபட்ட நபா் எம்ஜிஆா் நகா், ஏசுநாதா் ஆலயம் தெருவைச் சோ்ந்த விஜய பிரதாபன் (26) என்பதும், அவா் எஸ்ஐ இல்லை என்பதும், போலியான எஸ்ஐ அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, விடுதி மேலாளரை பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலி எஸ்ஐ விஜயபிரதாபனை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவரிடமிருந்து போலியான அடையாள அட்டை, ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.