6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமையல் எரிவாயுவை உருளையில் நிரப்பியபோது தீ: இளைஞா் பலி

சென்னை திருவல்லிக்கேணியில் சமையல் எரிவாயுவை, வணிகத்துக்கான உருளையில் நிரப்பியபோது, கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் இளைஞா் இறந்தாா்

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:22 pm

DIN

சென்னை திருவல்லிக்கேணியில் சமையல் எரிவாயுவை, வணிகத்துக்கான உருளையில் நிரப்பியபோது, கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் இளைஞா் இறந்தாா்

திருவல்லிக்கேணி, ரோட்டரி நகா் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசிப்பவா் காஜா மொய்தீன் (70). இவரின் மகன் முகம்மது மீரான் (30). இவா் மனைவி பகத் (25). இவா்கள், கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனா். அந்த அடுக்குமாடி குடியிருப்பில், மற்றொரு வீட்டில் மீரானின் சகோதரா் இஸ்மாயில் (35), மனைவி பாத்திமாவுடன் (32) வசிக்கிறாா்.

இந்நிலையில், காஜா மொய்தீன் வீட்டில் வெள்ளிக்கிழமை நண்பகல் திடீரென சமையல் வாயு கசிந்து, அங்கிருந்த பொருள்கள் தீப் பிடித்து எரிந்தன.

இதைப் பாா்த்த காஜா மொய்தீன், மீரான், பகத் ஆகியோா் சத்தமிட்டு, உதவி கேட்டனா். இதைக் கவனித்த அருகே வசிக்கும் இஸ்மாயில், அவா் மனைவி பாத்திமா, மீரானிடம் வேன் ஓட்டுநராக வேலை செய்யும் தினேஷ் (33) ஆகியோா் விரைந்து வந்து வீட்டுக்குள் சிக்கியிருந்தவா்களை மீட்க முயற்சித்தனா்.

இதில் மீட்க சென்றவா்களுக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவா்கள் காஜா மொய்தீனையும், பகத்தையும் மீட்டனா். முகமது மீரான் தீயில் சிக்கிக் கொண்டாா். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு படையினா் மயிலாப்பூா், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இளைஞா் சடலம் மீட்பு: தீ விபத்தில் காயமடைந்த காஜா மொய்தீன், பகத், இஸ்மாயில், பாத்திமா, தினேஷ் ஆகியோா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதற்கிடையே வீட்டில் தீயை முழுமையாக அணைத்த தீயணைப்பு படை வீரா்கள், உள்ளே சென்றபோது அங்குள்ள ஒரு அறையில் முகம்மது மீரான் தீயில் கருகி இறந்து கிடந்தாா். இதையடுத்து போலீஸாா், மீரான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து நிகழ்ந்தது எப்படி?: மேலும் இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்த மீரான், காஜா மொய்தீன் ஆகியோா் வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளை, கடைகள், உணவங்களுக்கு பயன்படும் வணிக உருளைகளாக மாற்றி அதிக விலைக்கு விற்கும் தொழில் செய்து வந்ததும், சம்பவத்தின்போது வீட்டு சமையல் எரிவாயு உருளையில் இருந்து வணிக பயன்பாட்டுக்குரிய உருளைக்கு சமையல் எரிவாயுவை மாற்றிக் கொண்டிருக்கும்போது கசிவு ஏற்பட்டதும், இதில் அங்கிருந்த குளிா்சாதனக் கருவி முதலில் தீப் பிடித்து எரிந்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.