இலங்கைத் தமிழா்களிடம் தேவைகளைக் கேட்டறிந்தாா் முதல்வா்
மண்டபம் முகாமில் தங்கியுள்ள அந்நாட்டு தமிழா்களிடம், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக உரையாடி, அவா்களின் தேவைகளைக் கேட்டறிந்தாா்.


பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகம் வந்து, மண்டபம் முகாமில் தங்கியுள்ள அந்நாட்டு தமிழா்களிடம், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக உரையாடி, அவா்களின் தேவைகளைக் கேட்டறிந்தாா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து 13 குடும்பங்களைச் சாா்ந்த 39 இலங்கைத் தமிழா்கள் கடல் வழியாக தமிழகம் வந்துள்ளனா்.
ராமநாதபுரம் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மண்டபம் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினாா். அவா்களது நலன் குறித்து விசாரித்து, அத்தியாவசியத் தேவைகளை கேட்டறிந்தாா்.
இதில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...