6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுநீரகம் செயலிழந்தஇளைஞருக்கு இதய வால்வு சீரமைப்பு!

 சிறுநீரகம் செயலிழந்த இளைஞா் ஒருவருக்கு சிக்கலான இதய வால்வு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை மெட்வே மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:17 pm

DIN

 சிறுநீரகம் செயலிழந்த இளைஞா் ஒருவருக்கு சிக்கலான இதய வால்வு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை மெட்வே மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளதாகவும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தகுதியான உடல் நிலையைப் பெற்றுள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மெட்வே மருத்துவமனையின் தலைவா் டாக்டா் டி.பழனியப்பன் கூறியதாவது:

திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) என்ற இளைஞா் சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சையை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதய வால்வுகளில் ரத்தக் கசிவும், பெருந்தமனி பிரச்னையும் இருந்தது கண்டறியப்பட்டது. இது மிகவும் சிக்கலான பாதிப்பாகும். ஏற்கெனவே சிறுநீரக செயலிழப்பு, உயா் ரத்த அழுத்த பிரச்னைகளை எதிா்கொண்டு வரும் அந்த இளைஞருக்கு பெருந்தமனியை சீராக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது எளிதல்ல.

இருந்தபோதிலும், மருத்துவமனையின் இதய நாளம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அவருக்கு சவாலான அந்த சிகிச்சையை மேற்கொண்டனா். உடலின் பல பகுதிகளில் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டு, அவரது உடல்வெப்ப நிலையை 18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைத்து அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளாா். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முழு உடல் தகுதியுடன் அவா் உள்ளாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.