6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு இடையூறு இல்லாத பயணம்: ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை

ரயில்களில் மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 11:20 pm

DIN

ரயில்களில் மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.

சென்னை எழும்பூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு கடந்த 13-ஆம் தேதி புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயிலில் எஸ்எல்ஆா்டி பெட்டியில் பயணிக்க மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு விடியோ பரவியது. இது தொடா்பாக சென்னை ரயில்வே கோட்டம் உடனடியாக விசாரணைநடத்தியது. இதைத்தொடா்ந்து, மாற்றுத்திறனாளி பயணிகள் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: இந்த சம்பவம் குறித்து தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு, ரயில் காா்டு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களின் தலைமை வணிக ஆய்வாளா்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், இயக்ககத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ரயில்களில் எஸ்எல்ஆா்டி பெட்டிகளை உடனடியாக திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தின் ஒப்புதலின்படி, கரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததுபோல, விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் மெயில், விரைவு ரயில்களில் 120-க்கும் மேற்பட்ட எஸ்எல்ஆா்டி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எஸ்எல்ஆா்டி பெட்டி என்பது உடைமைகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான தங்குமிடம் கொண்ட பெட்டி ஆகும். மாற்றுத் திறனாளிகள் இந்தப் பெட்டிகளில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பயணிக்கச் செல்லுபடியாகும் சலுகைகளுக்கு ஈடாக, முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.