
சென்னை: வருவாய்த் துறையில் உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. கேள்வி நேரத்திற்கு பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.