விஷ்வா தீனதயாளன் மறைவு: முதல்வர் இரங்கல்

மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன்(18) பலியானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
photo pti twitter
photo pti twitter
Published on
Updated on
1 min read

மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன்(18) பலியானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

83-ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் குவாஹாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். 

இவர்களுடைய கார், ரிபோயி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இந்த சம்பத்தில் தமிழக வீரர் விஷ்வா தீனதயாளன் மற்றும் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

படுகாயமடைந்த மேலும் 3 வீர‌ர்கள் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்த மூன்று வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷ்வாவின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் அவரது சடலத்தை பெறுவதற்காக ஷில்லாங்கிற்குச் செல்கிறார்கள். 

2022 ஜனவரியில் தேசிய தரவரிசை போட்டியில் 19 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான பட்டத்தை வென்றவர் தீனதயாளன்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் மரணம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சி அளிக்கிறது. இளம் சாதனையாளராக உருவாகி கொண்டிருந்த அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு பிரிந்தது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com