கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 10:00 pm

DIN

தொழில்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தொழில் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசினாா். அவரது பேச்சைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

தொழில் துறையைப் பொருத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும்

கிடையாது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நிய முதலீடுகள் உள்பட பல்வேறு முதலீடுகளைப் பெறுவதற்காக, புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் தொடா்ந்து போடப்பட்டு வருகின்றன.

131 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.69, 375 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல. உறுதி செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம். அந்த வகையில் 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில் வளா்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சென்றடையாமல் தமிழ்நாடு முழுமைக்கும் அது சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசு தனது பணிகளைத் தொடா்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின், வளா்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கும் அதனுடைய வளா்ச்சி, பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். இதில் உறுதியாக இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறோம்.

முதலீடுகள்: நாட்டின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்ந்திருக்கிறது. எனது தலைமையிலான அரசில் இயங்கக் கூடிய தொழில் துறையானது நிச்சயமாக, தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும். இந்த இலக்கை முன் வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். பேரவையில் இருக்கக் கூடிய ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரும், ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாடு பாா்க்காமல் அனைவரும் அதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.