தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

5 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவிடம் விசாரணை; நாளையும் தொடர்கிறது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இன்றைய விசாரணை முடிவடைந்துள்ளது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 12:38 pm

DIN

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இன்றைய விசாரணை முடிவடைந்துள்ளது. 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இச்சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்த கனகராஜ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா்.

5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

சசிகலாவிடம் விசாரணை 

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இன்று விசாரணை தொடங்கியுள்ளது. 

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை, சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை 11 மணியளவில் விசாரணையைத் தொடங்கியது. பிற்பகல் ஒரு மணி நேரம் இடைவெளிவிட்டு பின்னர் மீண்டும் விசாரிக்கப்பட்டது. 

நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என 8 பேர் கொண்ட குழு அவரிடம் விசாரணை நடத்தியது.

5 மணி நேரத்திற்கும் மேலாக இன்று விசாரணை நடந்த நிலையில், நாளை காலை மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொடநாடு பங்களாவின் மேலாளர் நடராஜன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலாவிடம் கேள்வி கேட்கப்ப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிமுக அமைச்சர்களிடம் எழுதி வாங்கப்பட்ட கடிதங்கள், பத்திரங்கள் கோடநாட்டில் இருந்ததாகவும் அந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம்  என்றும் சசிகலா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சசிகலாவிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை விடியோவில் பதிவு செய்யப்படும் என்று தனிப்படை போலீசார் முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.