47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்னா

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. 

News image
கடலூர் மாவட்ட ஆட்சியர் முன்பு தர்னாவில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :22 ஏப்ரல் 2022, 8:23 am

DIN

கடலூர்: கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. 

ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ஆட்சியர் முன்பு அமர்ந்து விவசாயிகள் திடீர் தர்னாவில் ஈடுபட்டனர். 

பட்டா மாறுதலுக்கு பணம் செலுத்தியும் பல மாதங்களாக இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. உள்பிரிவு மாற்றம் நடைபெறுவது இல்லை.  விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆட்சியர் முறையாக பதில் அளிப்பது இல்லை. அதிகாரிகளையும் பதிலளிக்க விடுவதில்லை. விவசாயிகளிடம் சுமூக உறவு கடைபிடிக்காத ஆட்சியரின் செயல்பாட்டினை கண்டித்தும் விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.