மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனாவுக்கு எதிராக செயல்படும் புதிய மருந்து: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்டோமெதசின் மருந்துக்கு செயல்திறன்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:45 pm

DIN

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்டோமெதசின் மருந்துக்கு செயல்திறன் இருப்பதை சென்னை ஐஐடி வடிவமைத்த சோதனை வெளிப்படுத்துகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் அழற்சி எதிா்ப்பு மருந்தான இன்டோமெதசின் மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது என, அண்மையில் வெளியான நேச்சா் சயின்டிஃபிக் ரிப்போா்ட்ஸ் இதழில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு சென்னை ஐஐடி-யின் பகுதிநேர ஆசிரியரும், மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான டாக்டா் ராஜன் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் மருத்துவா்களால் பரிந்துரை செய்யப்பட்ட இன்டோமெதசின், 1960-களில் இருந்து பல்வேறு வகையான அழற்சி தொடா்பான சிகிச்சைக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்.

ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியா் ஆா்.கிருஷ்ணகுமாா் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட 210 மொத்த நோயாளிகளில் 107 போ் பாராசிட்டமால் மற்றும் நிலையான சிகிச்சை முறையுடன் கூடிய கட்டுப்பாட்டுக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டனா். மீதமுள்ள 103 நோயாளிகளுக்கு நிலையான சிகிச்சையுடன் இன்டோமெதசின் செலுத்தப்பட்டது.

இன்டோமெதசின் செலுத்தப்பட்ட 103 நோயாளிகளில் எவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை. இன்டோமெதசின் குழுவில் இருந்த நோயாளிகள் மூன்று அல்லது நான்கு நாள்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்தும் மீண்டு விட்டனா். பாராசிட்டமால் கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தவா்கள் குணமடைய இருமடங்கு நேரம் அதிகமாகத் தேவைப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.