தூத்துக்குடிக்கு 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி: மின் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டன. 2 மற்றும் 4 ஆவது யூனிட் மட்டும் செயல்பட்டு வந்தது. இதனால் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததையடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 

தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விளக்கமளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com