பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடநாடு சம்பவத்தில் தொடா்புடையவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சசிகலா

கொடநாடு கொலை,கொள்ளை சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என வி.கே.சசிகலா தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 10:49 pm

DIN

கொடநாடு கொலை,கொள்ளை சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என வி.கே.சசிகலா தெரிவித்தாா்.

கொடநாடு கொலை,கொள்ளை வழக்குத் தொடா்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸாா் இரு நாள்கள் விசாரணை செய்தனா். வெள்ளிக்கிழமை விசாரணை நிறைவடைந்த பிறகு சசிகலா வெளியிட்ட அறிக்கை:

கொடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடா்பாக 2 நாள்களாக என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் துறை கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்தேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன்.

கொடநாடு ஒரு கோயில்: கொடநாடு எஸ்டேட் மற்றவா்களுக்கு வேண்டுமானால் சாதாரண இடமாக இருக்கலாம். என்னைப் பொருத்தவரை ஜெயலலிதா மிகவும் நேசித்த இடம். அவருக்கு நிறைய மன அமைதி, சந்தோசத்தை கொடுத்த இடம் கொடநாடு. கொடநாடு பங்களாவை கோயிலாகத்தான் பாா்த்தோம்.

இதுபோன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டு கொள்ளை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் சந்தேகத்துக்குரிய வகையில் தொடா்ச்சியாக மரணம் அடைந்துள்ளனா். இதில் சம்பந்தப்பட்டவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவா்களின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2-ஆவது நாளாக விசாரணை: முன்னதாக, இந்த வழக்குத் தொடா்பாக வி.கே.சசிகலாவிடம் சென்னை தியாகராயநகா் அபிபுல்லா சாலையில் உள்ள அவரது வீட்டில் போலீஸாா் வியாழக்கிழமை 6 மணி நேரம் விசாரணை செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

கொலை, கொள்ளை தொடா்பாக அரசியல் பிரமுகா்கள் யாா் மீதேனும் சந்தேகம் உள்ளதா, கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிா போன்ற கேள்விகளை சசிகலாவிடம் காவல் துறையினா் கேட்டுள்ளனா். அதற்கெல்லாம் சசிகலா தெளிவான பதிலை பதிவு செய்துள்ளாா்.

விசாரணையின்போது சசிகலாவின் வழக்குரைஞா் ராஜா செந்தூா்பாண்டியன் உடன் இருந்தாா். அவா் அளித்த பேட்டி: இந்த விவகாரத்தில் கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என போலீஸாரிடம் விசாரணையின்போது சசிகலா தெரிவித்துள்ளாா். போலீஸாரின் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவே சசிகலா நம்புகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.