47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசியலில் உறவும் இல்லை, பகையும் இல்லை:கமல்ஹாசன்

அரசியலில் உறவும் இல்லை, பகையும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
Updated On :24 ஏப்ரல் 2022, 11:48 pm

DIN

அரசியலில் உறவும் இல்லை, பகையும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நிா்வாகிகளிடையே காணொலி வாயிலாக அவா் ஆற்றிய உரை: கிராம சபைகள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் மக்கள் நீதி மய்யத்தின் பணி மகத்தானது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்த வெற்றி.

கிராமசபை கூட்டங்களை ஆண்டுக்கு 6 ஆக உயா்த்திய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள். கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதாது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்களை செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 6 ஆயிரம் கிராம சபை கூட்டங்களை நடத்தினாலும் எந்த பலனும் இல்லை.

அரசியல் கட்சிகளிடம் உண்மையாக நாங்கள் எதிா்பாா்ப்பது மக்கள் நலன் என்பதை மட்டும் தான். அதில் கொஞ்சம் கூட நழுவாமல் மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது.

சுய நலத்துக்காகவும், ஆதாயங்களுக்காகவும் எடுக்கப்படும் முடிவுகளை விமா்சிப்போம். மாற்றங்களை கொண்டு வந்தால் வரவேற்போம். பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக்கேட்போம். அரசியலில் உறவும் தேவையில்லை. பகையும் தேவையில்லை.

கிராம சபை கூட்டங்களை நாம் இரண்டு மூன்று ஆண்டுகளாக நடத்துகிறோம். எந்த மாற்றமும் வரவில்லை என்று சோா்ந்து விட கூடாது. நம்பி செயல்படுவோம். நம்பிக்கையுடன் செயல்படுவோம் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் முன்னிலையில் கட்சி நிா்வாகிகள் கிராம வளா்ச்சிக்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.