பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்

அண்ணாவின் சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளை மறந்து பாஜகவிற்கு அடிமையாகவே வலம் வந்துகொண்டிருக்கும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை

News image
துணைவேந்தர் நியமன மசோதா: பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
Updated On :25 ஏப்ரல் 2022, 9:35 am

DIN

அண்ணாவின் சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளை மறந்து பாஜகவிற்கு அடிமையாகவே வலம் வந்துகொண்டிருக்கும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். 

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த சட்ட மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: அண்ணாவின் சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளை மறந்து பாஜகவிற்கு அடிமையாகவே வலம் வந்துகொண்டிருக்கும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை. 

மேலும் மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு அடிமையாக இருக்கும் வழக்கம் அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.