

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.40 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 105.51 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2360 அடியாகக் குறைந்து உள்ளது. அதேவேளையில், நேற்று காலை 105.40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 72.16 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.