மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம்: நடவடிக்கைக் கோரி பெற்றோர் புகார் மனு
கோவில்பாளையத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை, கோவில்பாளையத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவில்பாளையம் பகுதியில் தனியார் நீட் பயிற்சி மையத்தின் விடுதியில் (ஸ்ரீவாரி மெடிக்கல் அகாடமி) கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஸ்வேதா(18) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீசார் தரப்பில் காதல் விவகாரத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மாணவியின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில்,
தனது மகளின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் (தற்கொலை செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரம் இல்லை, தாமதமாகத் தெரிவித்துள்ளனர், புலனாய்வு துவங்கும் முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அகாடமி நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவில்லை, ஆசிரியர் தவறாகப் பாடம் நடத்தியதைச் சுட்டிக் காட்டியதற்கு நிர்வாகம் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி உள்ளனர், இதற்கு முன்பே ஒரு பெண் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதால் தனது மகளை அச்சுறுத்தல் செய்துள்ளனர்.
இது குறித்து பேட்டியளித்த மாணவியின் பெற்றோர்,
மாணவியின் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் பேசிய அர்த்தனாரிபாளையம்(மாணவியின் ஊர்) ஊராட்சிமன்ற தலைவர் குலோத்துங்கன், மாணவியின் உயிரிழப்பு குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மனுவில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு முன்பே அந்த அகாடமியில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக மாணவி தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர் இதனால் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...