தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக்கொலை

எடப்பாடி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

News image

கொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் கந்தன் 

Updated On :27 ஏப்ரல் 2022, 2:47 pm IST

எடப்பாடி: எடப்பாடி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

எடப்பாடியை அடுத்த கொங்காணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட, கோணசமுத்திரம் ஊராட்சி இங்குள்ள கன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தன்(55). திமுக மாவட்ட பிரதிநிதியான இவர் ஏற்கனவே கோணசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்துவந்தார். கந்தனுக்கும் அதேபகுதியை சேர்ந்த சின்னபையன் மற்றும் மணிகண்டன் குடும்பத்தாறுக்கும் நிலப்பிரச்னை இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வழக்கு விசாரனையில் உள்ள நிலையில், புதன்கிழமை காலை கன்னியாம்பட்டி அருகே உள்ள தேஞ்சான்வளவு என்றப் பகுதியில் நடந்துவந்த கந்தனை வழிமறித்த சின்னபையன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும், அவரிடம் நிலம்தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சின்னபையன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கந்தனை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதில் துடிதுடித்து சாலையில் சாய்ந்த கந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட கந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து கந்தனின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீஸார், கொலை குறித்து விசாரனை மேற்கொண்டு கொலையாளிகளை தேடிவருகின்றனர். 

திமுக முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.