இன்று முதல் ஜூன் 5 வரைஉயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை
சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு சனிக்கிழமை முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு சனிக்கிழமை முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமைப் பதிவாளா் கோவிந்தராஜன் திலகவதி வெளியிட்ட அறிவிக்கை: சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு சனிக்கிழமை (ஏப்.30) முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மே மாதம் முதல் வாரம் மட்டும் திங்கள்கிழமை, புதன்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் வியாழன், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 20 நீதிபதிகளும், மதுரை கிளைக்கு 15 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...