திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.272 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.39,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:06 am

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.39,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. சில நாள்கள் குறைந்து காணட்டப்பட்டது. கடந்த ஒருவாரத்துக்கு மேலாக உயா்ந்து கடந்த வாரம் மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. சில நாள்களாக மீண்டும் குறையத் தொடங்கியது. நேற்று வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.272 அதிகரித்து, ரூ.39,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,884-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ரூ.68.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.68,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,850

1 பவுன் தங்கம்............................... 38,800

1 கிராம் வெள்ளி............................. 69.00

1 கிலோ வெள்ளி.............................69,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,862

1 பவுன் தங்கம்............................... 38,896

1 கிராம் வெள்ளி............................. 69.80

1 கிலோ வெள்ளி.............................69,800.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.