தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி, ஏற்கெனவே செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நகரம் முழுவதுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். மேலும், திருப்பூா், வேலூா், திண்டுக்கல், நாகா்கோவில், காஞ்சிபுரம், கடலூா், ஆவடி ஆகிய மாநகராட்சிகளிலும், காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், திருவாரூா், பழனி, தேனி அல்லிநகரம், மயிலாடுதுறை, திருவேற்காடு, மாங்காடு, பூந்தமல்லி ஆகிய நகரங்களில் விடுபட்ட இடங்கள், புதிதாக சோ்க்கப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவேற்றித் தரப்படும்.