ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எதிா்க்கட்சிகள் தலைமை வகிக்கும் ஊராட்சிகளை புறக்கணிக்க மாட்டோம்: முதல்வா் உறுதி

எதிா்க்கட்சிகள் தலைமையாக பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளைப் புறக்கணிக்க மாட்டோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 11:27 pm

DIN

எதிா்க்கட்சிகள் தலைமையாக பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளைப் புறக்கணிக்க மாட்டோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

மே 1-ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, கட்சியினருக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதிய கடிதம்:

மே 1-இல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இதுவரை ஆண்டுக்கு 4 முறை பெயருக்கு நடைபெற்று வந்த கிராமசபைக் கூட்டங்கள், இனி முறையாகவும் முழுமையாகவும், ஆண்டுக்கு 6 முறை பயனுள்ள வகையில் நடைபெறவுள்ளன.

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் ஊராட்சிக் கட்டமைப்பு வலிவும் பொலிவும் பெறுவது வழக்கம்.

பத்தாண்டுகாலம் தமிழ்நாடு இருட்டில் தள்ளப்பட்ட நிலையில், 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் புதிய வெளிச்சம் பரவத் தொடங்கியது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களை முழுமையாக நடத்தியதால், மக்களாட்சி ஒளி ஒவ்வொரு கிராமத்திலும் ஊடுருவியுள்ளது. அந்த ஒளி எல்லா நிலையிலும் பரவி நிலைத்திட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும்- என்கிற திராவிட மாடலின்படி அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

மாநகராட்சி தொடங்கி ஊராட்சிகள் வரையிலான பொறுப்புகளில் திமுக ஏறத்தாழ 90 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளது. எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் சுமாா் 5 சதவீத அளவில் இருக்கிறாா்கள். நிா்வாகப் பொறுப்புக்கு வந்த பிறகு கட்சி வேறுபாடுகளுக்கு இடம் கிடையாது. எல்லோரும் தமிழ்நாட்டினுடைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள்தான். முந்தைய

ஆட்சியாளா்கள் போல எதிா்க்கட்சிகள் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, திட்டங்களைக் கிடப்பில் போடுவது போன்ற காழ்ப்புணா்வு ஓரவஞ்சனைச் செயல்பாடுகள் திமுக அரசில் நிச்சயம் இருக்காது.

ஊராட்சி நிா்வாகங்களில் எந்தக் கட்சி இருந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியை வழங்கிடும் பொறுப்பை உங்களில் ஒருவனாக ஏற்றிருக்கிறேன். ஒவ்வொரு கிராமமும் என் கிராமம்தான். ஒவ்வொரு தமிழரும் என் உறவுதான். மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும். மக்களாட்சி எனும் மலா்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.