
திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலையை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக அத்தியவாசியப் பொருள்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால் ஏழை, எளியோர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியவாசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.சித்திரைவேல், தெற்கு மாவட்டச் செயலாளர் கே.டி.எஸ்.ராஜா, மாநில மாணவரணி செயலாளர் அஸ்வின் நோயல், கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.