காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குமரி மாவட்டத்தில் அதிகனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில்  அதிகனமழை பெய்யும் என்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :

கன்னியாகுமரி மாவட்டத்தில்  அதிகனமழை பெய்யும் என்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் அறிவிக்கையின்படி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை அதிகனமழை பெய்ய உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (ஆக.2) விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும்வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

வெள்ள சேத விவரங்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய விவரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 04652 - 231077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.