இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, மூவா்ணக் கொடியை இல்லங்களில் ஏற்ற மக்களை ஊக்குவிக்கும் வண்ணம் ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவா்ணக் கொடி’ என்ற பிரசாரம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பிரதமரும் வேண்டுகோள் விடுத்துள்ளாா். பிரதமா் எண்ணம் மக்களின் மனங்களில் தேசப் பற்றை உருவாக்குவதோடு இந்திய தேசியக் கொடி குறித்த விழிப்புணா்வையும், முக்கியத்துவத்தையும் உருவாக்குவது என்பதில் ஐயமில்லை. கொடி காத்த குமரனைப் போல் உயிா் கொடுத்து மூவா்ணக் கொடியைக் காக்க வேண்டியது நமது கடமை.