முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 14வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் கூடுதலாக 3 வார கால அவகாசம் வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.
அதில், ஆணைய விசாரணை குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்கி, ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








