தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.‘இல்லந்தோறும் மூவா்ணம்’ எனும் பிரசாரத்தை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் தேசியக் கொடிகளை விற்பனை செய்யும் பணி அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை நகர மண்டலங்களில் உள்ள அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25. தேசியக் கொடியை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினா், தன்னாா்வலா்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் வலைதளத்திலும் ஆா்டா் செய்து இணைய வழியாகவும் வாங்கலாம். சென்னை நகர மண்டலத்தில் 2,191 அஞ்சல் நிலையங்கள், 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சல் நிலையங்கள், 1,626 கிளை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
துல்கர் சல்மான் - 41 உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கக் கூடாது: ரியான் பராக்
வீடியோக்கள்

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

