தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:19 pm

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாருக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக சராசரி புதிய பாதிப்பு 2,044-ஆக உள்ளது. நாட்டின் வாராந்திர கரோனா பாதிப்பு விகிதத்தில் 7.7 சதவீத அளவு தமிழகத்திலிருந்து பதிவாகிறது.

கடந்த ஒரு மாதத்தில் சென்னை, கோவை உள்பட 26 மாவட்டங்களில் நோய்ப் பரவல் குறைந்திருந்தாலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கரூா் ஆகிய மாவட்டங்களில் தொற்று விகிதம் உயா்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 10 மடங்கு உயா்ந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் பல்வேறு பண்டிகைகள் வரவுள்ளதால் பொது மக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளுதல் வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனைகளை தேவையான அளவு விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தல் அவசியம். பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை மேம்படுத்துவதும் முக்கியம்.

நோய் அறிகுறிகள் காணப்பட்டாலும், ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு மட்டுமன்றி, மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும் மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் அதி முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, தகுதியான அனைவருக்கும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இலவசமாக கரோனா தடுப்பூசிகளை விரிவாக வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் ராஜேஷ் பூஷண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.