எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேட்டூர் அணை நீர் திறப்பு 1.30 லட்சம் கனஅடியாகக் குறைவு!

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,30,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 9:03 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,30,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியில் அணையின் நீர்மட்டம் நீடித்து வருகிறது. 

கனமழை நீடித்ததால் மேட்டூர் அணையிலிருந்து வெள்ளநீர் வெறியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 2,10,000 கன அடிவரை நீர் வரத்து அதிகரித்து வந்தது.

அணையிலிருந்து வினாடிக்கு 1,80,000 கனஅடி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 1,50,000 கனஅடியாகவும் பிற்பகலில் 1,30,000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. 

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் புகுந்த பகுதிகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கியது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,77,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பிற்பகலில் 1,31,000 கன அடியாக சரிந்தது.

நீர் இருப்பு வினாடிக்கு 93.53 டி.எம்.சியாக உள்ளது. அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,07,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.