தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழகத்தில் மேலும் 1,094 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,094 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 3:19 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,094 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 1,094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,51,641-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 239 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 127, செங்கல்பட்டு 94 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,033 ஆக உள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 1,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,03,347-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,261 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.