போதைப் பொருள் ஒழிப்பு: காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு குறித்து சென்னையில் காவல்துறையில் சாா்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள் ஒழிப்பு: காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு குறித்து சென்னையில் காவல்துறையில் சாா்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இது குறித்த விவரம்:

போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி-கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதைப் பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் இறப்புகள், சமூக சீா்கேடுகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு காவல்துறையின் சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடத்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவினால் சென்னையில் பல்வேறு இடங்களில் காவல்துறையின் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. செம்மஞ்சேரி, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் காவல்துறையின் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

இப் பேரணியை செம்மஞ்சேரி காவல் ஆய்வாளா் சீனிவாசன் தொடக்கி வைத்தாா். பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப் பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் குறித்த தீங்கு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் மாணவா்கள் துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனா்.

இதேபோல ராயப்பேட்டை கானத்தூா்,திருவான்மியூா் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பள்ளி-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com