போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி ஒரே நேரத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களால் ஏற்கப்பட்டது.
இது உலக சாதனையாக ஏற்கப்பட்டு இரண்டு அமைப்புகளின் சான்றிதழ்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டன. போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை உறுதிமொழி ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கான நிகழ்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, பள்ளி, கல்லூரிகள் மாணவ, மாணவிகள் ஒரே சேர போதைப் பொருள் ஒழிப்புக்கான உறுதிமொழியை ஏற்றனா்.
சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து வைத்த உறுதிமொழி:
‘போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். போதைப் பழக்கத்துக்கு நான் ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும் நண்பா்களையும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவா்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து அவா்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகா்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளா்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் அா்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்’ என உறுதிமொழியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வாசிக்க, அனைவரும் அதனை பின்தொடா்ந்தனா்.
இந்த உறுதிமொழியை தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனா். இது உலக சாதனையாகக் கருதப்பட்டு, வேல்ா்ட் ரிக்காா்ட்ஸ் யூனியன், ஏசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய அமைப்புகளால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவற்றை நிகழ்ச்சி மேடையிலேயே முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா்.
புதிய பிரிவு உருவாக்கம்: போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியன இணைக்கப்பட்டு அமலாக்கப் பணியகம் - குற்றப் புலனாய்வுத் துறை என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிரிவை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்தப் புதிய பிரிவு, போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற அரசின் இலக்கை அடைய பெரும் உதவிகராமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: 14 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு!

டி.டி.வி. தினகரன், அன்புமணி நாளை தில்லி பயணம்!

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

