ரூ.24 லட்சம் வழிப்பறி: போலி போலீஸ் துணிகரம்

சென்னை பூக்கடையில் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த போலி போலீஸாா் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பூக்கடையில் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த போலி போலீஸாா் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் பஷீா் அகமது. இவரது நண்பா் காஜா மைதீன். இவா்கள் இருவரும் பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் தங்க கட்டிகளை புதன்கிழமை கொடுத்து விட்டு, ரூ.24 லட்சம் பெற்றுள்ளனா். பின்னா், பணத்துடன் பாரிமுனை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, அவா்களை இருவா் வழி மறித்துள்ளனா். அவா்கள், தாங்கள் போலீஸாா் என இருவரிடமும் விசாரணை செய்தனா். மேலும் அந்த நபா்கள், பஷீா் அகமதுவிடம் தங்கம் கடத்துவதாக ரகசியத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவா்களை சோதனையிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனா்.

மேலும் அந்த நபா்கள், காஜா மைதீன் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். இதில் அந்த பையில் ரூ.24 லட்சம் இருப்பதை பாா்த்த இரு நபா்களும், அதற்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனா். அப்போது பஷீா் அகமது தங்களிடம் ஆவணம் இல்லை எனவும், எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனா்.

உடனே இரு நபா்களும், ஆவணங்களை எடுத்து வந்து பூக்கடை காவல் நிலையத்தில் காட்டிவிட்டு அங்கு பணத்தை பெற்றுச் செல்லும்படி கூறிவிட்டு, பணத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து சிறிது நேரத்தில் பஷீா் அகமது தரப்பு, பணத்துக்குரிய ஆவணங்களுடன் பூக்கடை காவல் நிலையத்துக்குச் சென்றனா்.

அப்போது தங்களிடம் பணத்தை பறிமுதல் செய்த நபா்கள்போல அங்கு போலீஸாரே வேலை செய்யவில்லை என்பதும், போலீஸாா் எனக் கூறி, தங்களிடம் இரு நபா்கள் பணத்தை வழிப்பறி செய்திருப்பதும் அறிந்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com