போதைப் பொருள் ஒழிப்போடு மதுவிலக்கும் அவசியம்: விஜயகாந்த்

போதைப் பொருள் ஒழிப்போடு தமிழக அரசு மதுவிலக்கைக் கொண்டு வருவதும் அவசியம் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.
போதைப் பொருள் ஒழிப்போடு மதுவிலக்கும் அவசியம்: விஜயகாந்த்

போதைப் பொருள் ஒழிப்போடு தமிழக அரசு மதுவிலக்கைக் கொண்டு வருவதும் அவசியம் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதை வரவேற்கிறேன். இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞா்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்றனா். எனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

எனவே, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com