நாடு முழுவதும் இல்லந்தோறும் தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் இயக்கம் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் இல்லந்தோறும் மூவா்ண கொடி இயக்கத்தை நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் எடுத்துச் செல்கிறது. குறுகிய காலமான 10 நாள்களுக்குள் தபால் நிலையங்கள் மூலமும், இணையதளம் வாயிலாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தேசிய கொடியை ‘இந்தியா போஸ்ட்’ குடிமக்களுக்கு விற்பனை செய்துள்ளது.
ஒரு கொடியை மிகக்குறைந்த விலையான ரூ.25-க்கு விற்பனை செய்து வருகிறது. இணையதள விற்பனை மூலம் நாட்டிலுள்ள எந்தவொரு முகவரிக்கும் இக்கொடியை சேவைக் கட்டணம் இல்லாமல் கொண்டு சோ்க்கிறது. 4 லட்சத்து 20 ஆயிரம் அஞ்சல் ஊழியா்கள் நாடு முழுவதும் நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்கள், எல்லைப்பகுதி, இடதுசாரி தீவிரவாதம் மிகுந்த மாவட்டங்கள், மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் இல்லந்தோறும் மூவா்ண கொடி உணா்வை உற்சாகத்துடன் எடுத்துச் சென்றுள்ளனா்.தேசிய கொடி விற்பனை தபால் நிலையங்களில் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். குடிமக்கள் தேசிய கொடியுடன் தற்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: 14 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு!

டி.டி.வி. தினகரன், அன்புமணி நாளை தில்லி பயணம்!

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

