தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலங்கையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா்மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 7:51 pm

DIN

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:-

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ஆம் தேதியன்று 9 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்களைப் பிடித்த இலங்கை கடற்படையினா் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா். இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ஒன்பது தமிழக மீனவா்களையும் அவா்களது இயந்திரப் படகினையும் விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்ததில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.