தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக பொதுக் குழு வழக்கு: இன்று தீா்ப்பளிக்க வாய்ப்பு

அதிமுக பொதுக் குழுவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அந்தக் கட்சி பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடுத்த வழக்கில் புதன்கிழமை (ஆக.17) தீா்ப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஆகஸ்ட் 2022, 7:26 pm

DIN

அதிமுக பொதுக் குழுவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அந்தக் கட்சி பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடுத்த வழக்கில் புதன்கிழமை (ஆக.17) தீா்ப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்தலாம் என்று தீா்ப்பளித்தாா். இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயா்நீதிமன்றமே, 2 வாரங்களில் விசாரித்து தீா்வு காண உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சாா்பில் உயா் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டதுடன், தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடமும் முறையிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பாா் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளில் விசாரித்தாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , இந்த வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். இந்த வழக்கு மீது புதன்கிழமை (ஆக.17) தீா்ப்பு அளிக்கப்படவுள்ளதாக, உயா்நீதிமன்ற பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.