கட்சியை விட்டு நீக்கிய பிறகு ஓபிஎஸ் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என்றும் அதிமுகவின் மனுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு அண்ணா தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் திமுக அரசு நிறைவேற்றவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வருமா?
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், 'சட்டப்பேரவைத் தலைவர் தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். கட்சியை விட்டு நீக்கிய பிறகு ஓபிஎஸ்ஸை சுயேச்சை எம்எல்ஏவாகத் தான் பார்க்க வேண்டும். அதைத் தான் பேரவைத் தலைவர் செய்ய வேண்டும். அதிமுகவின் மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட்டு அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுவது தேவையற்ற பேச்சு. அவர் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது.
'பந்திக்கு முந்தி படைக்கு பிந்தி' என்பது போலத் தான் ஓபிஎஸ் தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் மாபெரும் சக்தி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் பக்கம் 80% உறுப்பினர்கள் இல்லை. வெறும் 80 பேர் தான் இருக்கின்றனர். அவர் முடிந்தால் ஒரு ஆயிரம் பேரை திரட்டிக் காண்பிக்கப்பட்டும் பார்க்கலாம். அவரது நிலை என்ன என்பது தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.
சசிகலா, டிடிவி தினகரனை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என்றார்.
இதையும் படிக்க | 'கோல்ட் காபி'யை அறிமுகம் செய்யும் ஆவின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

