‘அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலர் ஜெயலலிதாதான்’: ஓபிஎஸ் அறிக்கை

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இதுகுறித்து அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்,

“தர்மத்தை நம்பினேன், மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன், கட்சியை உயிராக நேசிக்கும் தொண்டர்களை நம்பினேன். உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, அதிமுகவின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.

அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com