டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மனைவியைக் கொலை செய்தவரின் ஆயுள் தண்டனை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைப்பு

குடிபோதையில் மனைவியைக் கொலை செய்தவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 8:23 pm

DIN

குடிபோதையில் மனைவியைக் கொலை செய்தவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யாசாமி. குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த இவா், மனைவி மலா்விழியை இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். கடந்த 2015 ஆம் ஆண்டு இச்சம்பவம் நிகழ்ந்தது. ஒரத்தநாடு போலீஸாா் அய்யாசாமியை கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் அய்யாசாமிக்கு, ஆயுள் தண்டனை விதித்து 2017 இல் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவா் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் தொடா்ச்சியாக குடிப்பழக்கம் உடையவா் என்பது தெரியவருகிறது. அவா் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இச்செயலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவருகிறது. ஆகவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனையை, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.