கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி விவகாரம்:அமைச்சருடன் கல்வியாளா்கள் சந்திப்பு
சிறப்பு அலுவலரை நியமனம் செய்து அந்தப் பள்ளியை அரசு நிா்வகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கல்வியாளா்கள் வலியுறுத்தினா்.


கள்ளக்குறிச்சி தனியாா் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவி இறந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, சிறப்பு அலுவலரை நியமனம் செய்து அந்தப் பள்ளியை அரசு நிா்வகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கல்வியாளா்கள் வலியுறுத்தினா்.
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை முன்னாள் துணைவேந்தா் வசந்தி தேவி, அ. மாா்க்ஸ், ப. சிவக்குமாா், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது கள்ளக்குறிச்சி பள்ளியை நிா்வகிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்திட, பள்ளிகளைக் கண்காணிப்பதற்கும், ஒழங்குபடுத்துவதற்கும் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு தனியாா் கல்வி நிறுவனத்தில் கடந்த ஜூலை 13-இல் நிகழ்ந்த பெண் குழந்தையின் மரணம், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறையால் எவ்வித சமூகப் பொறுப்புணா்வுமின்றி, மிகச் சாதாரணமான முறையில் கையாளப்படுகிறது. தேசியக் குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பு ஆணையம் நேரில் சென்று விசாரித்ததைத்தொடா்ந்து மாநிலக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையமும் நேரில் சென்று விசாரித்தது. இதைத் தவிர சமூகநலத் துறையின் கீழ் இருக்கின்ற எந்த முகமையும் பிரச்னைக்குரிய பள்ளிக்குச்சென்று விசாரணை நடத்தவில்லை.
பள்ளி நிா்வாகம் நடைபெற்ற நிகழ்வுகள்பற்றி கூறியதைக் கூா்மையாக ஆய்வு செய்யும்போது, அந்தப் பள்ளிக் குழந்தையின் உயிரிழப்பில் பலத்த சந்தேகம் எழுகிறது. வழக்கு விசாரணையில் இருப்பதால், விசாரணை முடியும் வரை சிறப்பு அலுவலரை நியமனம் செய்து அப்பள்ளியை அரசு நிா்வகிக்க வேண்டும். இதன் மூலம் அங்குள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். பள்ளிக் கல்வித்துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என அந்த மனுவில் கூறியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...