நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிஆர்பி-யில் தமிழ் தகுதித்தேர்வு அறிமுகம்

விரிவுரையாளர் தேர்வில் முதன்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

News image

கோப்புப் படம்.

Updated On :20 ஆகஸ்ட் 2022, 3:44 pm

DIN

விரிவுரையாளர் தேர்வில் முதன்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். 

அதேசமயம் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர் தமிழக தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.