பதிவெண் இல்லா வாகனங்கள்: பொது மக்கள் புகாா் அளிக்கலாம்
சாலையில் பதிவெண் பலகை இல்லாத வாகனங்களை கண்டால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் தெரிவித்தாா்.


சாலையில் பதிவெண் பலகை இல்லாத வாகனங்களை கண்டால் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா், சனிக்கிழமை அளித்த பேட்டி:
சென்னையில் மோட்டாா் சைக்கிளில் வாகன பதிவெண் பலகையை பொருத்தாமல், பல்வேறு குற்றச்சம்பவங்களிலும், பந்தயங்களிலும், சாகசங்களிலும் சிலா் ஈடுபடுகின்றனா். இதை கட்டுப்படுத்தி தடுக்கும் வகையில்,கடந்த 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.
இந்த சோதனையில் வாகன பதிவெண் பலகை இல்லாமல் சென்ற 828 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வாகனத்தின் உரிமையாளா்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அந்த வாகனங்கள் இதற்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டதா என்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் குற்றச்சம்பவங்களில் யாரும் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவா்களுக்கு வாகன பதிவெண் பலகை பொருத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, 813 வாகனங்களில் பதிவெண் பலகை பொருத்தி அவை விடுவிக்கப்பட்டன. 15 வாகனங்களுக்கு எந்த ஒரு ஆவணங்களும் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன. போக்குவரத்து விதிகளுக்குட்பட்டு அனைவரும் வாகன பதிவெண் பலகை பொருத்த வேண்டும்.
சாலைகளில் பதிவெண் பலகை இல்லாத வாகனங்களை பாா்த்தால் பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம். இதற்காக சமூக ஊடகங்களில் போக்குவரத்து போலீஸ் சாா்பில் விழிப்புணா்வு குறுந்தகவல்கள் பரப்பப்படுகின்றன. பதிவெண் பலகை இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். வாகன பதிவெண் பலகை மீது ஏதேனும் எழுதினாலும், படங்கள், ஸ்டிக்கா் ஒட்டினாலும் குற்றம் தான்.
1.25 லட்சம் வழக்குகள்: சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வாகன பதிவெண் பலகை தொடா்பாக 1 லட்சத்து 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்
டன. தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுபவா்கள் மீது தினமும் 3 ஆயிரத்து 500 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியவா்கள் மீது தினமும் 100 வழக்குகளும் பதியப்படுகின்றன. வாரத்தில் 2 முறை சிறப்பு வாகனத் தணிக்கையும் செய்யப்படுகிறது. சிறப்பு வாகனத் தணிக்கையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது மட்டும் சுமாா் 250 வழக்குகள் பதியப்படுகின்றன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...