ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களை செய்ய அஞ்சும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :

சென்னை: பாலியல் குற்றங்களை செய்ய அஞ்சும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்ததால் கொடியவன் ஒருவனால் தீயிட்டு எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி, ஒரு மாத உயிர்ப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள். 7 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டலுக்கும், ஒரு மாதமாக துடிதுடித்து இப்போது உயிரிழந்திருப்பதற்கும் காரணம், அந்த சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்தது தான்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பழக்கம் முக்கிய காரணமாகும். பாலியல் குற்றங்களை செய்தால் தண்டனை பெறாமல் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் நிலவுவது தான் குற்றங்கள் பெருகுவதற்கு இன்னொரு காரணம் ஆகும். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.